• t1
  • t2
  • t3
  • t4
  • t5
2 3 4 5 6

     வணக்கம்  நண்பர்களே  தமிழ்மொழியை  காப்பதற்கும்  வளர்ப்பதற்கும்  DJ – தமிழ்.காம்  என்ற  இந்த   இணையதளத்தை  திறந்துள்ளோம்.

“அகர  முதல  எழுதெல்லாம்  ஆதி  பகவன்  முதற்றே  உலகு.”

          என்ற  வள்ளுவரின்  வாக்குப்படி  இறைவனால்  உருவாக்கப்பட்ட  எம்  தாய்மொழி  தமிழ்  வேகமாக  அழிந்துவரும்  உலக  மொழிகளுள்  ஒன்றாக  உள்ளது.  இதனை  தடுக்கும்  பொருட்டு உருவாக்கப்பட்டதே  இந்த  இணையதளம்.  ஒவ்வொரு  பிள்ளைக்கும்  எப்படி  தன்  பெற்றோரை  காக்கும்  பொறுப்பு  உள்ளதோ  அவ்வாறே  அவரவர்  தம்  தாய்மொழியை  காக்கும்  பொறுப்பு  உள்ளதாகவே  நான் கருதுகிறேன். அதற்காக  பிறமொழிகளை  கற்பதை  தவறு  என  கூறவில்லை  தம்  தாய்மொழியை  மறக்காமல்  காக்கவும்  வளர்க்கவும்  வேண்டுமென்றுதான்  கூறுகிறேன்.

          எவ்வாறு  நம்  தாய்மொழியை  வளர்ப்பது?   எவ்வாறு  நம்  தாய்மொழியை  உலகறியச்  செய்வது?   என்று  என்  மனதில்  ஏற்பட்ட கேள்விகளுக்கு  இணையதளம்  ஒன்றுதான் இதற்கு  சரியான  தீர்வாகும்  என்று  எண்ணினேன்.  இன்று  இணையதளம்  மூலம்  உலகின்  எந்த  ஒரு  மூலையில்  இருந்தும்  பார்க்க,  பேச,  பதிவிறக்கம்  செய்ய,  கலந்துரையாட என்று  இன்னும்  எண்ணற்ற  செயல்களை  செய்ய  முடியும்.  எனவேதான்  இந்த  இணைய தளத்தை  உருவாக்கினேன்.  இணையதளத்தை  உருவாக்கி  தமிழ்  பாட  நூல்களை  பதிவு  செய்தால்  மட்டும்  போதுமா? அப்படி  செய்வதன்  மூலம்  தமிழ்மொழி  வளருமா  என்றால்  கண்டிப்பாக  இல்லை. பிறகு  எப்படி  வளர்ப்பது?   தமிழில்  பதிவுகள்  இடுவதால்  தமிழ்  எழுத  படிக்கத்  தெரிந்தவர்களால்  மட்டுமே  அதை  படிக்க  முடியும் அவர்கள்  விருப்பப்பட்டால்  அவர்களது  குழந்தைகளுக்கும்  தமிழ்  தெரியாத  அவர்களது  நண்பர்களுக்கும்  கற்றுத்தர  முடியும்  அதற்கு  இப்பதிவுகள்  உதவும்.  இதனால்  மட்டும்  தமிழ்  வளருமா?  என்றால்  இல்லை  என்றுதான்  கூறவேண்டும்.   ஆனால்  இதுவும்  ஒரு  வழியாக  இருக்கும்  என்று  கூறலாம்.

          மேலும்  இன்று  நாம்  உபயோகிக்கும் பொருட்கள்  அனைத்திற்கும்  அதனுடைய  சரியான  தமிழ்  பெயர்  தெரியுமா  என்றால்  நாம்  தெரியாது  என்றுதான்  கூறுவோம்.   அவ்வாறு  உள்ள  பொருட்களுக்கு  புதிய  தமிழ்ப்  பெயர்களை வைப்பதன்  மூலமும்  தமிழை  வளர்க்கலாம். புதுப்புது  தமிழ்  நூல்களை  படைப்பதின்  மூலமும்  பிறமொழி  நூல்களை  தமிழிலும்  தமிழ்மொழி  நூல்களை  பிறமொழிகளிலும்  மொழிமாற்றம் செய்வதன்  மூலமாக  தமிழை  வளர்க்கலாம்.  இவ்வாறு  செய்ய  இருமொழிகளிலும்  தேர்ச்சி  பெற்றிருதல்  அவசியமாகும்  எனவேதான்  பிறமொழிகளை  கற்பதில்  தவறில்லை  என்று  கூறினேன்.

          இவ்வாறு  செய்ய  ஏற்கனவே  பல  இணையதளங்கள்  உள்ளபோது  இது  எதற்கு  தனியாக  என்று  ஒரு  கேள்வி  எழலாம்.   தமிழ்மொழியை  வளர்க்கும்  பலரில்  நானும்  ஒருவனாக  இருக்க வேண்டும் என்ற  ஆசையும்  என்  தாய்மொழியை  வளர்ப்பதில்  எனக்கும்  கடமை  இருப்பதாக  நான்  கருதுவதால்  இந்த  இணையதளத்தை  உருவாக்கினேன். ஏதேனும்  தவறுகள்  இருப்பின் மன்னித்து  இந்த  இணைய தளத்தையும்  தமிழ் மொழியையும்  வளர்ச்சியடைய  உங்கள்  வாழ்த்துக்களையும் வரவேற்ப்பையும்  எதிர்ப்பார்க்கிறேன்.

“நன்றி வணக்கம்”

எங்களை தொடர்பு கொள்ள