• t1
  • t2
  • t3
  • t4
  • t5
2 3 4 5 6

தமிழ் மொழி கற்க

         ஒரு மொழியை முழுமையாக கற்பதற்கு அம்மொழியின் எழுத்துக்களையும் எண்களையும் தெளிவாக கற்க வேண்டும், அவ்வாறு கற்கும் போதுதான் அம்மொழியை பேசவும் படிக்கவும் எழுதவும் முடியும் அவ்வாறின்றி பேச்சு வழக்கின் மூலமாக ஒரு மொழியை கற்றோமானால் சரளமாக பேச மட்டுமே முடியுமே அன்றி எழுதவும் படிக்கவும் முடியாது. எனவே ஒரு மொழியின் எண் மற்றும் எழுத்துக்களை அறிவது அவசியம். அதுபோல் தமிழ் மொழியின் எழுத்துக்களையும் எண்களையும் இனி பார்க்கலாம்.

தமிழ் எழுத்துக்கள் (Thamizh Alphabets / Tamil Characters)

         தமிழ் எழுத்துக்களை மூன்று வகையாக சான்றோர் வகுத்துள்ளனர் அவையாவன :

                    1. உயிர் எழுத்துக்கள்    –    Uyir Ezhuthukal (Vowels)
                    2. மெய் எழுத்துக்கள்     –    Mei Ezhuthukal (Consonants)   
                    3. ஆய்த எழுத்து                –    Aaitha Ezhuthu

உயிர் எழுத்துக்கள் – 12

         அ     ஆ     இ     ஈ     உ     ஊ     எ     ஏ     ஐ     ஒ     ஓ     ஒள

          A       Aa      I        Ii       U      Uu      E      Ea     Ai      O      Oo       Av

மெய் எழுத்துக்கள் – 18

          க்     ங்    ச்     ஞ்     ட்     ண்     த்     ந்     ப்     ம்     ய்     ர்     ல்     வ்     ழ்     ள்     ற்     ன்

          Ik     Ing   Ich    Inj      It       Inn      Ith    Ind    Ip     Im      Iy     Ir       Il       Iv     Izh     Ill      Irr      In

ஆய்த எழுத்து  – 1

          ஃ    Ak

எழுத்தோரன்ன குறியீடுகள் (Character Codes)

        எழுத்தோரன்ன குறியீடுகளாக ஆயுத எழுத்து, குற்றியலிகரம் மற்றும் குற்றியலுகரம் ஆகியவற்றை சான்றோர்கள் வகுத்துள்ளனர்.

        இது தவிர தற்போது தமிழில் கிரந்த / வடமொழி எழுத்துக்களும் பயன்படுத்தப்படுகிறது.

கிரந்த எழுத்துக்கள் (Grantha Characters / Kirantha Scripts)

        ஜ்     ஷ்     ஸ்     ஹ்     க்ஷ்     ஸ்ரீ

         Ij      Ish       Is        Ih        Iksh     Sri

Close Menu