உயிர்மெய் எழுத்துக்களின் தோற்றம் (Appearance of Thamizh Alphabets)
உயிர் எழுத்துக்களோடு மெய் எழுத்துக்கள் கூடி அதாவது சேர்ந்து வருவது உயிர்மெய் எழுத்துக்கள். இதனை பின்வருமாறு எழுதலாம்.
“உயிர் + மெய் = உயிர்மெய்”.
உதாரணமாக (Example):
அ + க் = க – A + Ik = Ka
ஆ + க் = கா – Aa + Ik = Kaa
இ + க் = கி – I + Ik = Ki
ஈ + க் = கீ – Ii + Ik = Kee
உ + க் = கு – U + Ik = Ku
ஊ + க் = கூ – Uu + Ik = Koo
எ + க் = கெ – E + Ik = Ke
ஏ + க் = கே – Ea + Ik = Kea
ஐ + க் = கை – Ai + Ik = Kai
ஒ + க் = கொ – O + Ik = Ko
ஓ + க் = கோ – Oo + Ik = Ko
ஒள + க் = கௌ – Av + Ik = Kau/Kav
இவ்வாறு உயிர் எழுத்துக்கள் 12ம் மெய் எழுத்துக்கள் 18ம் சேர்ந்து மொத்தம் 216 எழுத்துக்கள் பிறக்கின்றன. அதாவது – 12 X 18 = 216.
உயிர்மெய் எழுத்துக்கள் (Consonants)
மொத்த தமிழ் எழுத்துக்கள்.
தமிழ் எழுத்துக்களின் மொத்த கூட்டுத்தொகை 247 அது பின்வருமாறு பார்க்கலாம்.
உயிர் எழுத்துக்கள் – 12
மெய் எழுத்துக்கள் – 18
உயிர்மெய் எழுத்துக்கள் – 216
ஆய்த எழுத்து – 1
____________
மொத்த எழுத்துக்கள் – 247
____________