— கடவுள் வாழ்த்து —
நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்!
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்!
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்!
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற!
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்!
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்!
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்!
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்!
ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்!
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!
விளக்கம் :
அலை கடலே ஆடையான இந்த அழகான பூமிப் பெண்ணிற்கு பாரத நாடே முகமாம் தென்திசை அதன் நெற்றியாம் அதில் திலகமென திகழ்வது திராவிட திருநாடாம் அந்தத் திலகத்தின் வாசனைப் போல் அனைத்து உலகமும் இன்பம் காண எல்லா திசையிலும் புகழ் மணக்க இருக்கும் தெய்வமகள் ஆகிய தமிழே! பல உயிர்களையும், உலகத்தையும் படைத்தளித்த பரம்பொருளை போல கன்னடமும் தெலுங்கும் மலையாளமும் மற்றும் துளுவும் உன் உதிரத்தில் பிறந்து ஒன்று பல வடிவாக பெருகினாலும் ஆரிய மொழிபோல் உலக வழக்கு அழிந்து சிதையா உன் சீரிளமை என்றென்றும் இளமையாக இருக்கிற உன்னுடைய இந்த அழகைக் கண்டு வியந்து, செய்யும் செயலையும் மறந்து வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம்
பாடலை எழுதியவர் : மனோன்மணியம் பெ. சுந்தரம் பிள்ளை
Translate in english
muzhumaiyana thamizhthai vazhthudan athan vilakkathaiyum therinthu konden nandri, vazhthukal ungal pani melum thodarattum