— தேசிய கீதம் — 

ஜன கண மன அதிநாயக ஜய ஹே!
பாரத பாக்ய விதாதா!
பஞ்சாப ஸிந்து குஜராத மராட்டா!
திராவிட உத்கல பங்கா!
விந்திய ஹிமாசல யமுனா கங்கா!
உச்சல ஜலதி தரங்கா!
தவ சுப நாமே ஜாகே!
தவ சுப ஆசீஸ மாகே!
காஹே தவ ஜய காதா!
ஜன கண மங்கள தாயக ஜய ஹே!
பாரத பாக்ய விதாதா!
ஜய ஹே ஜய ஹே ஜய ஹே! 
ஜய ஜய ஜய ஜய ஹே!

பாடலை எழுதியவர் – மகாகவி இரவீந்தரநாத் தாகூர்

விளக்கம் :
இந்தியத் தாயே! மக்களின் இன்பத் துன்பங்களைக் கணிக்கின்ற நீயே எல்லாருடைய உள்ளத்திலும் ஆசிசேக்கிறாய். நின் திருப்பெயர் பஞ்சாபையும், 
சிந்துவையும், கூர்ச்சரத்தையும், மராட்டியத்தையும், திராவிடத்தையும், ஒரிசாவையும், வங்காளத்தையும் உள்ள கிளர்ச்சி அடைய செய்கிறது. 
நின் திருப்பெயர் விந்திய, இமயமலைத் தொடர்களில் எதிரொலிக்கிறது. யமுனை, கங்கை ஆறுகளின் இன்னொலியில் ஒன்றுகிறது. 
இந்திய கடலலைகளால் வணங்கப்படுகிறது. அவை நின்னருளை வேண்டுகின்றன. நின் புகழை பரவுகின்றன. இந்தியாவின் இன்பத் துன்பங்களைக் 
கணிக்கின்ற தாயே உனக்கு வெற்றி! வெற்றி! வெற்றி!

This Post Has One Comment

  1. indruthan desiya keethathin vilakkathai arinthu konden nandri

Leave a Reply

தேசிய கீதம்

Close Menu