— தமிழுக்கும் அமுதென்று பேர் —

தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர் – இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவிக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர் – இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர் – இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்
தமிழ் எங்கள் இளமைக்குப் பால் – இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான் – இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்கு சுடர்தந்த தேன்
                                                             தமிழ் எங்கள் அறிவுக்கு தோள் – இன்பத்
                                                             தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
                                                             தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் – இன்பத்
                                                             தமிழ் எங்கள் வலமிக்கத் உளமுற்ற தீ

படம் : பஞ்சவர்ணக்கிளி
பாடலாசிரியர் : பாரதிதாசன்
பாடியவர் : சுசீலா
இசையமைத்தவர் : விஸ்வநாதன் & ராமமூர்த்தி

This Post Has 2 Comments

  1. intha paadal video & audio vadivil veliyidavum

  2. Ani Lorak Hold my heart.
    You’re Wet Under the Doge.
    It is important that you have a prescription in such cases.

Leave a Reply

தமிழுக்கும் அமுதென்று பேர்

Close Menu