பொங்கல் திருவிழா
அறுவடைத் திருவிழா
“தை பிறந்தால் வழி பிறக்கும்”
என்ற பழமொழிக்கு ஏற்ப தமிழ் மாதங்களில் சிறப்பு வாய்ந்த மாதம் தை மாதம். தை மாதத்தின் முதல் நாளை பொங்கல் திருநாளாகவும் அறுவடை திருநாளாகவும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த அறுவடைத் திருநாளை தமிழர்கள் மட்டுமின்றி பல்வேறு நாட்டினரும் பல்வேறு பெயர்களில் கொண்டாடுகின்றனர்.
குறிப்பாக கொரியாவில் – சூ சாக் என்றும், ஜப்பானில் – டோரி நோய்ச்சி என்றும், வியட்நாமில் – தெட் திரங் து என்றும், இஸ்ரேலில் – சக்கோத் என்றும், ரோமனில் – சதுர்நாலியா என்றும் பல்வேறு காலகட்டங்களில் அறுவடைத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
ஏன் இந்த அறுவடைத் திருவிழா கொண்டாடப்படுகிறது என்றால் பயிர்களை அறுவடை செய்யும் போது பயிர்களின் உயிர்கள் பிரிகிறது. பிரிந்த அந்த ஆன்மாக்களை சாந்தப்படுத்தவும், பயிர்களும் மனிதர்களும் உயிர்வாழ காலமெல்லாம் பலன் எதிர்பாராமல் நமக்கு உதவும் சூரியனுக்கும் நன்றி கூறும் விதமாக இந்த அறுவடைத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பண்டிகையின் தோற்றம்
இந்த பொங்கல் பண்டிகையின் தோற்றம் எப்போது தொடங்கியது
என்று சரியாக அறிய முடியவில்லை ஆயினும் சோழர் காலத்தில்
“புதியீடு” என்ற பெயரில் கொண்டாடப்பட்டுள்ளது. புதியீடு என்றால்
ஆண்டின் முதல் அறுவடை என்றுப் பொருள்.
பின்னர்தான் இது பொங்கல் என்று பெயர் மாறியுள்ளது. இந்த பொங்கல் திருவிழா ஆரம்பத்தில் மூன்றுநாள் திருவிழாவாகத்தான் கொண்டாடப்
பட்டுள்ளது தற்போதுதான் நான்குநாள் விழாவாகக் கொண்டாடி
வருகின்றனர்.
போகிப் பொங்கல்
போக்கி என்ற சொல் மருவி போகி என்றாகியுள்ளது. மார்கழி மாதத்தின் கடைசி நாளில் இந்த போகிப் கொண்டாடப்படுகிறது. மார்கழிப் பெண் விடைப் பெற்று தை மகளை வரவேற்பது என்றும் அல்லவை அழிந்து நல்லவை வரட்டும் என்றும் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்றும் கூறுவர்.
இதன் காரணமாகத்தான் கிராமங்களில் வீடுகளுக்கு புதிய வண்ணங்கள் அடித்து சுத்தப்படுத்தி போகியன்று வீட்டில் உள்ள தேவையற்ற பழைய பொருள்களை தீயிலிட்டு கொளுத்துவார்கள். வீட்டில் உள்ள அசுத்தங்கள் மட்டுமல்ல மக்களின் மனதில் உள்ள அசுத்தத்தையும் போக்கி வாழ வேண்டும் என்பதாகும். அசுத்தத்தை போக்கி சுத்தத்தை வரவேற்பதுதான் போகியின் தத்துவமாகும்.
தைப் பொங்கல்
தை மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படுவது தைப் பொங்கலாகும். இதனை தமிழர் திருநாள் என்றும் உழவர்த் திருநாள் என்றும் தமிழர்கள் கொண்டாடுவார்கள். வருடம் முழுதும் வயலில் வியர்வை சிந்த உழைத்த உழவர்கள் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தைப் பொங்கலன்று வீட்டு வாசலில் அரிசி மாவு கோலமிட்டும் புத்தாடை அணிந்தும் புதுப்பானையில் மஞ்சள் குங்குமம் வைத்து பானையில் அரிசி வெள்ளம் ஆகியவற்றை கலந்து பொங்கலிட்டு கரும்பு, மஞ்சள் கொத்து, புத்தாடை ஆகியவற்றை தம் வீட்டினுள் முன்னோர்களுக்கும், வீட்டின் வாசலில் சூரியன் இருக்கும் திசைநோக்கி சூரியனுக்கும் படையலிட்டு பொங்கலோ பொங்கல் என்று கூறி பொங்கலை கொண்டாடுவார்கள்.
மாட்டுப் பொங்கல்
மூன்றாம் நாள் திருவிழாவாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. நமக்காக வருடமெல்லாம் உழைக்கும் மாடுகளுக்கு நன்றி கூறும் தினமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் மாடுகளை சுத்தப்படுத்தி மஞ்சள் குங்குமம் வைத்து அதன் கொம்புகளுக்கு வண்ணங்கள் பூசி கழுத்தில் புது மணிக்கட்டி அலங்கரித்து பூஜை செய்து பொங்கலைப் படைத்து கொண்டாடி மகிழ்வார்கள்.
திருவள்ளுவர் தினம்
தை இரண்டாம் நாளை திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடுவர். ஒன்றே முக்கால் அடிகளில் மக்களின் வாழ்வியலுக்கு தேவையான வழிமுறையை 133 அதிகாரங்களில் ஒரு அதிகாரத்திற்கு 10 குறட்ப்பாக்கள் வீதம் 1330 குரள்களை வழங்கியவர் திருவள்ளுவர். மா, பலா, வாழை என்ற முக்கனி சுவையைப் போல திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று முத்தமிழின் சுவையை உலகுக்கே தந்தவர் வள்ளுவர்.
“அனுவைத் துளைத்து அதில் ஏழ்கடலைப் புகுத்தி குறுகத் திரிந்த குறள்” என்று புகழப்பட்டது திருக்குறள். திருக்குறள் கிட்டத்தட்ட உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் மொழிப் பெயர்க்கப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு பெருமை சேர்த்த திருவள்ளுவரின் நினைவாக திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது.
காணும் பொங்கல்
பொங்கல் கொண்டாட்டத்தின் கடைசி தினமாக காணும் பொங்கல் தற்போது கொண்டாடப் படுகிறது. அந்நாளில் வழிப்பாட்டுத் தலங்களுக்கும் சுற்றுலாத் தலங்களுக்கும் சென்று உறவினர்களையும் , நண்பர்களையும் கண்டு இனிப்புகளை வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை பரிமாறி கொள்வதும். வழக்கமாக கொண்டுள்ளனர்.
“பொங்கும் மங்களம் என்றும் தங்கிட அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.”
pongal patriya thagavalkal arumai
Thank you
This is Robert Kowalski from LegalPL Company from Poland-Warsaw (Europe).
In this mail sending you special our offer about immigration services to Europe:
1. Work 1 Year Visa to Poland (Work Visa+Work Permit);
2. Study in Poland (Study 1 Year Visa);
3. Business Immigration to Poland (Business 1 Year Visa);
Mostly our clients from India, Pakistan, Nepal, Bangladesh, Vietnam, China, Iran, Ukraine, Russia, Belarus, Philippines, Indonesia, Vietnam, China.
If you are interesting in our services, please contact with us in WhatsUp/Viber/Telegram +48 793 636 986 or write me: r.kowalski@legalpl.net
Thank you,
Best Regards,
Robert Kowalski,
LegalPL Company
Hi, very nice website, cheers!
——————————————————
Need cheap and reliable hosting? Our shared plans start at $10 for an year and VPS plans for $6/Mo.
——————————————————
Check here: https://www.reliable-webhosting.com/